Department of Tamil
About The Department
தமிழ்த்துறை
ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையில், இளங்கலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் அடித்தளப் படிப்பு பகுதி 1 தமிழ் கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் நல்ல முறையில் தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெறும் நோக்கத்தோடு மட்டுமின்றி, தமிழ் மொழியில் பிழையின்றி எழுதுதல், தெளிவான உச்சரிப்புடன் பேசுதல், வாசித்தல் திறனை ஊக்குவித்து மேம்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளும் நடைபெறுகின்றன.
ஆவிச்சி கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக நற்றமிழ் மன்றம் தொடங்கப் பெற்றுள்ளது. அம்மன்றத்தின் சார்பாக பல்வேறு கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் தமிழ் மொழி தொடர்பான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கருத்தரங்கம் மற்றும் ஒப்புவித்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கும் மாணவர்கள், தங்களின் திறனை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் அனுப்பப்படுகின்றனர். இவ்வாறு கல்வியுடன் கூடிய திறனை வளர்க்கும் பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.
தகுதியும் திறமையும் வாய்ந்த பேராசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி செயல்படுகின்றனர் தமிழ் மொழி பாடம் தவிர்த்து, பிற மொழியைப் பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை தமிழ் பாடம் சிறப்பாகக் கற்பிக்கப்படுகிறது.
தனித்தன்மை
“கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு… முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்குடி!” என்று தமிழின் தொன்மை தொன்று தொட்டு பேசப்பட்டு வருகிறது. அத்தகைய தமிழ்மொழியின் தொன்மைகளை மாணவர்களுக்குக் கற்பிக்கும் நோக்கில், தொல் எழுத்துகளையும் (பிராமி/தமிழி) அவ்வப்போது மாணவர்களுக்கு எம் ஆசிரியர்கள் கற்றுதருகின்றனர். தொல்லியல் துறைச் சார்ந்த புரிதல் மாணவர்கள் ஏற்படும் வண்ணம் தொடர்ந்து தொல்லியல் தொடர்புடைய நிகழ்வுகள் நடைப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக எம் மாணவர்களை, தொல்லியல் களங்களாக அறியப்படும் பகுதிகளுக்கு(காஞ்சிபுரத்தில் உள்ள பழமைவாய்ந்த கோவில்கள்) அத்துறை வல்லுநர்களையும், உடன் அழைத்துச்சென்று கள ஆய்வில் ஈடுபடுத்தினோம்.
குறிப்பாக, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து, ‘தொல்லியல் களமும் பழந்தமிழர் மரபும்’ என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் எம் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்தியது. இதில் எமது மாணவர்கள் மட்டுமின்றி பிற கல்லூரி மாணவர்களும்,ஆசிரிய பெருமக்களும் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். இதுபோன்ற பயனுள்ள பல நிகழ்வுகள் தொடர்ந்து எம் கல்லூரியில் நடைப்பெற்று வருகிறது.
நோக்கங்கள்
கற்றலுக்கான நுணுக்கங்களை அறியச் செய்தல், மாணவர்களுக்கு மொழி ஆளுமை பயன்பாட்டினை உணர்த்துதல், நூலகத்திற்குச் சென்று தினசரி செய்தித்தாள், பருவ இதழ்களை வாசிக்கும் திறனை மேம்படுத்துதல், தமிழ் இலக்கியம் தொடர்பான பொதுத்தமிழ் அறிவு வினா-விடை போட்டிகள் நடத்துதல், தமிழ்மொழியின் தொன்மைகளை, சிறப்புகளை கற்பித்தல்……முதலானவைகளை நோக்கங்களாகக் கொண்டு எம் கல்லூரி நிறுவனம் செயல்படுகிறது.
Faculty

Ms .S. Ponmani
Assistant Professor

Dr .D. Indumathi
Assistant Professor

Ms. M. Prabhavathi
Assistant Professor
Objective
- கற்றலுக்கான நுணுக்கங்களை மாணவர்கள் அறியச் செய்தல். மாணவர்களுக்கு மொழியாளுமையின் பயன்பாட்டினை உணர்த்துதல்.
- நூலகத்திற்குச் சென்று தினசரி செய்தித்தாள். பருவ இதழ்களை வாசித்தல் திறனை மேம்படுத்துதல். தமிழ் இலக்கியம் தொடர்பான பொதுத்தமிழ் அறிவு வினா விடை போட்டிகள் நடத்துதல்.
Achievements
Contact Us
Address
Department Of Tamil
Avichi College Of Arts And Science
130, Arcot Road, Virugambakkam, Chennai-92
Department Working Hours
8.15 to 2.45 pm
Phone
044-23764227